கொடைக்கானல் அருகே சின்னபள்ளம் பகுதியில் ஹெலிபேட் அமைக்க வல்லுநர் குழு ஆய்வு

கொடைக்கானல் அருகே சின்னபள்ளம் பகுதியில் ஹெலிபேட் அமைக்க வல்லுநர் குழு ஆய்வு
X

கொடைக்கானல் அருகே சின்னபள்ளம் பகுதியில் ஹெலிபேட் அமைக்கப்படும் இந்திய வான் வழி துறை தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு

வல்லுனர்களின் அறிக்கையின் அடிப்படையில் விரைவில் ஹெலிபேட் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

கொடைக்கானல் அருகே சின்னபள்ளம் பகுதியில் ஹெலிபேட் அமைக்கப்படும் இந்திய வான் வழி துறை தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஹெலிபேட் அமைபதற்கான இடங்களை இந்திய வான் வழி துறை தொழில்நுட்ப வல்லுநர் குழு கேப்டன் ஆர்கே சிங் ,பீகே மார்கன், ஜியான் பிரகாஷ் ,ஆகியோர் ஆய்வு செய்தார்கள்.

ஹெலிபேட் அமைப்பதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பல்வேறு தேவைகளையும், மேம்பாட்டு பணிகளை இதன் மூலம் செய்ய வாய்ப்பு உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இது பற்றிய அறிக்கை அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சின்னபள்ளம் பகுதி ஹெலிபேடு அமைப்பதற்கு உகந்த இடம் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய வான் வழி துறை தொழில்நுட்ப வல்லுநர் குழு சின்னபள்ளம் பகுதியில் ஆய்வு செய்தனர்.

இந்திய வான் வழி துறை தொழில்நுட்ப வல்லுநர் குழுவை சேர்ந்த பீகே மார்கன் செய்தியாளர்களிடம் கூறியதாவது ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கு இந்த இடம் ஏற்றது. சின்னபள்ளம் பகுதி ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. எங்களது ஆய்வின் அறிக்கை 20 நாட்களுக்குள் ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பகுதியில் இறங்குதளம் அமைப்பதற்கு உரிய அடிப்படை பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார் .

வல்லுனர்களின் அறிக்கையின் அடிப்படையில் விரைவில் ஹெலிபேட் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது, வருவாய் துறை மற்றும் சுற்றுலா துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

Tags

Next Story
ai and business intelligence