/* */

எடப்பாடி ஸ்ரீ பர்வத ராஜகுல சமூகத்தை சேர்ந்த பக்தர்கள் பழனியில் குவிந்தனர்

எடப்பாடி ஸ்ரீ பர்வத ராஜகுல சமூகத்தை சேர்ந்த பக்தர்கள் பழனி தண்டாயுத பாணி கோவலில் குவிந்தனர்.

HIGHLIGHTS

எடப்பாடி ஸ்ரீ பர்வத ராஜகுல சமூகத்தை சேர்ந்த பக்தர்கள் பழனியில் குவிந்தனர்
X

எப்பாடியை சேர்ந்த பக்தர்கள் பழனி மலை முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வந்தனர்.

பழனியில் தைப்பூசத்திருவிழா கடந்த 12ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 21ம்தேதி வரை நடைபெற்றது.

தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டுமுழுவதும் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.கடந்த 360 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி வந்து செல்கிறார்கள். இதற்காக அவர்கள் மலைக்கோவிலில் தங்கி கொள்வதற்கான செப்பு பட்டயம் வழங்கப்பட்டு உள்ளது.

இதன்படி சண்முகநதி ஆற்றங்கரையில் குளித்து பழனி மலைக்கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இந்நிலையில் கொரோனா காரணமாக இம்முறை மலைக்கோயிலில் குறைவான பக்தர்கள் மட்டும் தங்குமாறு கோயில் நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ள நிலையில்,

எடப்பாடி காவடி குழுவினர் ஆயிரக்கணக்கானோர் பழனிக்கு பாதயாத்திரையாக வந்துள்ளனர். இவர்களுக்காக காவடி குழுவினர் சார்பில் பாதயாத்திரை வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழக்கம்.


இதற்காக 20ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடைபெற்றது. எடப்பாடி பக்தர்கள் ஊருக்கு திரும்பிச் செல்ல சேலம் மாவட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோயில் நிர்வாகம் சார்பில் சண்முகநதி ஆற்றுப்பகுதியில் முடி காணிக்ககை மற்றும் கழிப்பிட வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 27 Jan 2022 3:41 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!