பழனி அருகே வரதமாநதி அணையில் பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி முகாம்

பழனி அருகே வரதமாநதி அணையில் பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி முகாம்
X

திண்டுக்கல் மாவட்டம்‌ பழனியருகே உள்ள வரதமாநதி அணையில் பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

பழனி அருகே வரதமாநதி அணையில் காவல்துறையினருக்கு பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம்‌ பழனியருகே உள்ள வரதமாநதி அணையில் பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

பழனி தீயணைப்பு நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான பயிற்சி முகாமில் திண்டுக்கல் மாவட்ட அமைதிப்படை பிரிவில் பணியாற்றும்‌ போலீசார் மற்றும் காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் உள்ளிட்ட அனைத்து காவலர்களுக்கு, மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது, இயற்கை பேரிடர் காலங்களில் சமயோசிதமாக செயல்பட்டு பொதுமக்களை காப்பாற்றுவது மற்றும் நீச்சல் பயிற்சி ஆகியவை கொடுக்கப்பட்டது.

60க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்ட முகாமில் தீயணைப்புவீரர்கள்‌ பயிற்சி அளித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!