தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பறவைக்காவடியுடன் நேர்த்திக்கடன்

தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பறவைக்காவடியுடன் நேர்த்திக்கடன்
X

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம்தில் இருந்து வந்து பறவைக்காவடி எடுத்த பக்தர்கள்

ராட்சத கிரேன்களில் உடல் முழுதும் அழகு குத்தி பறவைக் காவடிகள் வந்தவர்களைக் கண்டு பொதுமக்கள் தரிசித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம்,பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு 15க்கும் மேற்பட்ட பக்தர்கள் பறவைக்காவடியில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன்‌ தொடங்கியது. தைப்பூசத் திருவிழா நடந்தாலும்‌ கொரோனா காரணமாக இன்றும் நாளையும் ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி என்பதால் முருகனை தரிசனம் செய்ய தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தில் இருந்து வந்த பக்தர்கள பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பாதயாத்திரை வந்த பக்தர்கள் பழனி சண்முக நதியில் புனித நீராடி பின்பு உடல் முழுவதும் அலகு குத்தியபடி பிரம்மாண்டமான பறவை காவடி எடுத்து வந்தனர்.

ஒரு பறவைக் காவடியில் 10 பக்தர்கள் உடல்முழுவதும்‌ அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அவர்களுடன்‌ 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் 10அடி நீளமுள்ள அலகு குத்தி நடந்து வந்தனர். ராட்சத கிரேன்களில் உடல் முழுதும் அழகு குத்தி பறவைக் காவடிகள் வந்தவர்களைக் கண்டு பொதுமக்கள் மெய்சிலிர்த்தனர்.மேலும் தாராபுரத்தில் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்த பக்தர்கள் நடனமாடிய வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!