புத்தாண்டு, தைப்பூசவிழாவை முன்னிட்டு பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை

புத்தாண்டு, தைப்பூசவிழாவை முன்னிட்டு பழனிக்கு  பக்தர்கள் பாதயாத்திரை
X
புத்தாண்டு, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்

புத்தாண்டு, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாக்களின் போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய பழனிக்கு படையெடுப்பார்கள்.

குறிப்பாக தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி, மதுரை, காரைக்குடி, சேலம், திருப்பூர், திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருவர். அதேபோல் புத்தாண்டு, பொங்கல் ஆகிய நாட்களையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு பாதயாத்திரையாக வருவார்கள்.

அவ்வாறு பாதயாத்திரை பக்தர்களுக்காக திண்டுக்கல்-ஆயக்குடி, அலங்கியம்-பழனி இடையே தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தைப்பூச திருவிழாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அப்போது பக்தர்களின் வருகையும் வெகுவாக குறைந்தது. குறிப்பாக முககவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து கோவிலுக்கு பக்தர்கள் வருவது கட்டாயமாக்கப்பட்டது.இந்தநிலையில் தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வருகை தருகின்றனர். அதேபோல் தைப்பூச திருவிழாவுக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு படையெடுத்து வருகின்றனர்.இதனால் பழனி கிரிவீதியிலும், நகர் பகுதியிலும் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Tags

Next Story