தண்டாயுதபாணி கோயில்- உப கோயில்களில் ஜன. 14 முதல் 18 வரை தரிசனத்திற்கு தடை

தண்டாயுதபாணி கோயில்- உப கோயில்களில் ஜன. 14  முதல் 18  வரை தரிசனத்திற்கு தடை
X

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் மற்றும் அதன் உப கோயிலுக்கு வருகின்ற 14 முதல் 18 வரை சுவாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று அதிகரித்துவரும் நிலையில் தமிழக மக்களின் நலனுக்காக இரவு நேர ஊரடங்கு , வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருக்கோயில்கள் சுவாமி தரிசனத்திற்கு தடை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தும் வருகின்ற 14 ஆம் தேதியிலிருந்து பதினெட்டாம் தேதி வரை சுவாமி தரிசனத்திற்கு தடை விதித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த காலகட்டத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வெளியூர்களில் இருந்து வருவதை தவிர்க்க வேண்டும்.தைப்பொங்கல் திருநாள் முடிந்து தைப்பூசம் ஆனது நடைபெற உள்ள நிலையில் பழனி மலை முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு தடைவிதித்துள்ளது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை மறுபரிசீலனை செய்யும் விதமாக தடுப்பூசி இரண்டு செலுத்தியவர்கள் மற்றும் அதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டவர்கள் என பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து கோயில்களை திறக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story