பழனி முருகன் கோவில் அர்ச்சகர்களுக்கு அரசின் நிவாரண தொகுப்பு வழங்கல்

பழனி முருகன் கோவில் அர்ச்சகர்களுக்கு அரசின் நிவாரண தொகுப்பு வழங்கல்
X

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அர்ச்சகர்களுக்கு, நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு, தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருக்கோவில்களில் நிலையான மாத சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு உதவித்தொகை 4000 ரூபாயும் , அரிசி 10 கிலோ மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் நிலையான மாத சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பூசாரிகள், சீர்பாத தூக்கிகள், நாவிதர்கள் என மொத்தம், 486 நபர்களுக்கு 4000 ரூபாய் உதவித்தொகை, பத்து கிலோ அரிசி, பதினைந்து வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை, குடமுழுக்கு அரங்கத்தில், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். திண்டுக்கல் ஆட்சியர் விசாகன், கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் செந்தில்குமார் உடனிருந்தனர்.

Tags

Next Story