கட்டணத்தில் மொட்டை -பழனி கோவிலில் தனி ரூல்: அமைச்சரின் அறிவிப்பு பொய்யாகிப்போனதா?
பழனி மலை கோவில்.
தமிழக அரசு கோவில்களில் கட்டணமில்லா முடி காணிக்கை வழங்கலாம் என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் பழனியில் கட்டணம் வசூல் .செய்வது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபையில் அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இனி கோவில்களில் முடி காணிக்கை கொடுக்கும் பக்தர்களுக்கு கட்டணம் இல்லை என அறிவித்து சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளார். முடி காணிக்கை செலுத்த கட்டணமில்லை என்ற விவரத்தை கோவில்களில் தேவைப்படும் அனைத்து இடங்களிலும் வைக்க வேண்டும். முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். முடி காணிக்கை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க பரிசீலனை செய்யப்படும்.
அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ள நிலையில் பழனி கோவிலில் மீண்டும் மொட்டை அடிக்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த செயல் அமைச்சரின் அறிவிப்பை பொய்யாக்குவது போலுள்ளது என்று பக்தர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பழனி என்றால் தொட்டதற்கெல்லாம் காசு வசூல் வேட்டையாடும் கும்பல் அலைகிறது என்ற ஒரு பெயர் பக்தர்கள் மத்தியில் இருக்கிறது. அதை மீண்டும் உண்மையாக்குவது போல உள்ளது மொட்டைக்கு கட்டணம் வசூல் செய்வது. கோவில்களை பொறுத்தவரை கட்டணமே வசூல் செய்யக் கூடாது என்கிற நிலை வரவேண்டும். கடவுளை தரிசிக்க காசு கொடுக்க வேண்டுமா? அதற்கு விஐபி பாஸ் தேவையா? அல்லது ஸ்பெஷல் தரிசனமாம், ஸ்பெஷல் வழியாம்..கடவுளுக்கே இது அடுக்காதே.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று முதல் மொட்டை அடிக்க கட்டணம் வசூலிக்கபடாது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துருந்த நிலையில் இன்று முதல் 30 டோக்கனுக்கு மட்டும் இலவசம்,
ஊழியர்களுக்கு சம்பளம் குறித்த அறிவிப்பு வராததால் ஊழியர்கள் பழைய முறையில் கட்டணம் வசூலிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu