கொடைக்கானல் மலைச்சாலையில் பேருந்து விபத்து: பயணிகள் உயிர் தப்பினர்

கொடைக்கானல் மலைச்சாலையில் பேருந்து  விபத்து: பயணிகள் உயிர் தப்பினர்
X

கொடைக்கானல் மலைச்சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து

எதிரே வந்தவாகனத்தின் மீது மோதுவதைத் தவிர்க்க தனியார் பேருந்து ஓட்டுனர் இடதுபுறம் ஒதுக்கியபோது இச்சம்பவம் நேரிட்டது

திண்டுக்கல் மாவட்டம்,கொடைக்கானல் மலைச்சாலையில் தனியார் பேருந்து சாலையோரத்தில் கவிழாமல் ஒதுங்கிய நின்றதால் பெரும் விபத்திலிருந்து அதிருஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை கிராமத்தில் இருந்து 50 பயணிகளுடன் நேற்று காலை கொடைக்கானலை நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. கொடைக்கானல் அப்சர்வேட்டரி அருகே சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த சுற்றுலா வாகனத்தின் மீது மோதுவதை தவிர்க்க, தனியார் பேருந்து ஓட்டுனர் இடது புறத்திற்கு ஒதுக்கியுள்ளார். இதில் பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது. பேருந்து முழுமையாக கவிழாமல் பேருந்தின் ஒரு பகுதி மட்டும் இறங்கி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் பேருந்தில் இருந்த பயணிகளை உடனடியாக மீட்டனர். விபத்து காரணமாக அப்சர்வேட்டரி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு