மத்திய அரசை கண்டித்து கொடைக்கானலில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து கொடைக்கானலில் திமுக  கூட்டணி கட்சிகள்  போராட்டம்
X
பாஜக அரசின் மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து கையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசை கண்டித்து கொடைக்கானலில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து கொடைக்கானலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடைக்கானல் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கொடைக்கானல் மூஞ்சிக்கல் மற்றும் பேருந்து நிலையம் பகுதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல், எரிவாயு விலை உயர்வு, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெற மறுப்பது, வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, உள்ளிட்ட பாஜக அரசின் மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து கையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, திமுக துணைப் பொதுச்செயலாளர், கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனைப்படி, மாவட்ட திமுக செயலாளர் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார் வழிகாட்டுதலுடன் இப்போராட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்