கொடைக்கானல் அருகே பூக்குழி இறங்கி விரதம் முடித்த ஐயப்ப பக்தர்கள்

அடுக்கும் கிராமத்தில், 36 ஆம் ஆண்டு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது விரதத்தைத் நிவர்த்தி செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்துள்ளது அடுக்கம் கிராமம். இங்குள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் வருடம் தோறும் மண்டலாபிஷேக த்தை முன்னிட்டு, பூக்குழி இறங்குவது வழக்கம். இந்த ஆண்டு, முப்பத்து ஆறாம் ஆண்டு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியானது வெகு விமர்சியாக நடைபெற்றது.
ஒரு மண்டல விரதம் இருந்து, ஐயப்ப பக்தர்கள் நேற்றிரவு 100க்கும் மேற்பட்டோர், பூக்குழி இறங்கி தங்களது தங்களது விரதத்தை பூர்த்தி செய்தனர். இதனைத் தொடர்ந்து, இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்கு புறப்படுவதற்கு ஆயத்தப் பணிகளை மேற்கொண்டனர். மேலும் மண்டல பூஜை நிறைவு நிறைவு நாளில், மாபெரும் அன்னதான நிகழ்வு நடைபெற்றது. கொடைக்கானல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஐயப்பனை வணங்கி சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu