வீடு தோறும் தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி பழனியில் விழிப்புணர்வு ஊர்வலம்
பழனியில் வீடு தோறும் தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது.
நாடு முழுவதும் வருகிற 15ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் வீடு தோறும் 3 நாட்கள் தேசிய கொடி ஏற்றி பறக்க விடவேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவின்படி நாடு முழுவதும் மக்கள் தேசிய கொடி ஏற்றினார்கள். இந்த ஆண்டும் அதே போல் வீடு தோறும் தேசிய கொடி ஏற்றவேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இதனை ஏற்று திண்டுக்கல் மாவட்டம் பழனி தபால் அலுவலகம் சார்பில் இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சுதந்திர தினத்தையொட்டி இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றுவோம்' என பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளார்.
அதனைதொடர்ந்து பழனி தபால் அலுவலகம் சார்பில் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு உப கோட்ட துணை கண்காணிப்பாளர் செண்பகராஜ் தலைமை தாங்கினார். தபால் அலுவலர் காந்திமதி, வணிக பிரிவு அலுவலர் கனிஷ்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தின் போது தபால் அலுவலக பணியாளர்கள் தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். ஊர்வலமானது புது தாராபுரம் ரோடு, திண்டுக்கல் ரோடு, ஆர்.எப். ரோடு, கான்வென்ட் ரோடு வழியே மீண்டும் தபால் அலுவலகம் வந்து நிறைவடைந்தது.
இந்த பேரணியில் தபால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu