காெடைக்கானலில் 4 மாதங்களுக்கு பிறகு அனுமதி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் 120 நாட்களுக்கு பிறகு பூங்காக்கள் மற்றும் படகு குழாம் திறப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனடிப்படையில் கொடைக்கானலில் உள்ள பூங்காக்கள், படகு குழாம் உள்ளிட்டவைகள் மூடப்பட்டன. நோய் தொற்று குறைந்த உடன் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் மலைப் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் படகு இல்லங்கள் மற்றும் பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து கொடைக்கானலில் இன்று 120 நாட்களுக்கு பிறகு பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, ஆகியவை திறக்கப்பட்டன.
கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்வதற்கு படகு இல்லங்கள் திறக்கப்பட்டன. கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் இயங்கி வரும் இரண்டு படகு இல்லங்கள், கொடைக்கானல் நகராட்சி சார்பில் இயங்கி வரும் ஒரு படகு இல்லம் உள்ளிட்ட 3 படகு குழாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்தும் பூங்காக்களில் பூக்களை ரசித்தும் மகிழ்ந்தனர். மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களை திறக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu