திண்டுக்கல் அருகே அரசு பஸ் டிரைவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை முயற்சி

திண்டுக்கல் அருகே அரசு பஸ் டிரைவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை முயற்சி
X

தற்கொலைக்கு முயன்ற அரசு பஸ் டிரைவர்.

திண்டுக்கல் அருகே அரசு பஸ் டிரைவர் வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள கோதைமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது36). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். பழனி கிளையில் இருந்து அரசு பஸ்சை இயக்கி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக பழனியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அரசு பஸ்சை ஓட்டி வந்தார்.

இந்நிலையில் பணி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் பலமுறை உயரதிகாரிகளிடம் தெரிவித்தும் தொழிற்சங்க நிர்வாகிகளின் தூண்டுதலால் தனக்கு ஓய்வில்லாத அளவிற்கு பணி வழங்குவதாகவும் கூறினார். எனவே மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தனது மரணத்திற்கு காரணம் போக்கு வரத்துக் கழக மேலாளர் கார்த்திகேயன் என்பவரே என கூறி வீடியோ பதிவு செய்து தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.

அதன்பிறகு பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த சக பணியாளர்கள் ராஜ்குமாரை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அரசு போக்கு வரத்துக்கழக ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனித வாழ்வில் அன்றாடம் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று தான். பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்படுவதும் தற்போது அனைத்து துறை பணியாளர்களுக்கும் உள்ளது. அன்றாட வாழ்வியல் பிரச்சினை மற்றும் பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்திற்கு தற்கொலை தீர்வாகாது. இதனை உணர்ந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்