கொடை அரசு மருத்துவமனைக்கு செஞ்சிலுவை சங்கம் ஆக்சிஜன் சிலிண்டர் நன்கொடை!

கொடை அரசு மருத்துவமனைக்கு செஞ்சிலுவை சங்கம் ஆக்சிஜன் சிலிண்டர் நன்கொடை!
X
கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில், கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சுமார் எழுபத்தி ஐந்து ஆயிரம் மதிப்புள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொடைக்கானல் தலைவர் டாக்டர் குரியன் ஆபிரகாம் ,கொடைக்கானல் ஆர்டிஓ சிவகுமார், கொடைக்கானல் போலீஸ் டிஎஸ்பி ஆத்மநாதன் ஆகியோர் இந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை, கொடைக்கானல் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் பொன் ரதியிடம் வழங்கினார்கள்.

இதேபோல், கொடைக்கானல் தனியார் மருத்துவமனைக்கும் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் தாவூத், நாட்ராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!