கேரட் விளைச்சலோ அமோகம் - விலையோ கேள்விக்குறி?

கேரட் விளைச்சலோ அமோகம் - விலையோ கேள்விக்குறி?
X
மலைப்பகுதி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கேரட் விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தோட்டக்கலை பயிர்களான உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், உள்ளிட்டவைகள் பெருமளவில் விளைவிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக கேரட் ஆண்டுதோறும் விளைவிக்கப்படுகிறது. ஒரு கிலோ கேரட் ரூ.30 முதல் 40 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 1௦ ரூபாய்க்கு விற்பதால் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக பெய்யும், தொடர் மழை காரணமாக, கொடைக்கானல் மலைக்கிராமங்களான வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, வாழை காட்டு ஓடை, குறிஞ்சி நகர், பெருமாள்மலை, பூம்பாறை, மன்னவனூர் ஆகிய பகுதிகளில் கேரட் அதிக விளைச்சல் கண்டுள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, கொடைக்கானலில் விளையும் கேரட்களை, வெளியூர் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று, விற்க முடியாத நிலை உள்ளது.

விளைச்சல் அதிகமாக இருந்தும், விலை கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழக அரசு மலைப்பகுதி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai healthcare technology