பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
பழனி முருகன் கோயிலில் 2021 ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு புத்தாண்டை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். மலை மீது செல்ல பக்தர்கள் பயன்படுத்தும் படிபாதை, வின்ச், ரோப்கார் நிலையங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. மலைக்கோயிலில் கட்டண மற்றும் இலவச தரிசன வரிசைகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் இரண்டு மணி நேரம் ஆனது.
மேலும் மலை மீதுள்ள முருகன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடத்தப்பட்டு பின் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மலை அடிவாரம், சன்னதி வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் நிறைந்திருந்தனர். மலைஅடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி முருகன் , கோவில் பெரியநாயகி அம்மன் கோவில், பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu