கொடைக்கானலில் தொடர் மழை

கொடைக்கானலில் நேற்று மாலை முதலே பெய்த மழை தொடர்வதால், சுற்றுலா பயணிகள் விடுதி அறைக்குள் முடங்கி இருக்கும் நிலை.

நேற்று மாலை முதல் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதாலும் கடும் மேகமூட்டத்தாலும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்கின்றனர்.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றி உள்ள தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பெருமாள்மலை, பூம்பாறை, கீழ்மலைப் பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் உள்ளூர்வாசிகள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் நியூஇயர் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் கடந்த சில நாட்களாகவே குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் விடுதி அறையிலேயே முடங்கி இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

மேலும் தொடர் மழை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலையில் செல்லும் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எச்சரிக்கையுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story
ai and future cities