மாசாணியம்மன் கோவிலில் கோரோனோ மாரியம்மன் சிலை வைத்து வழிபாடு

மாசாணியம்மன் கோவிலில் கோரோனோ மாரியம்மன் சிலை வைத்து வழிபாடு
X

கொரோனா மாரியம்மன் சிலையை வழிபடும் பக்தர்கள்.

ஒட்டன்சத்திரம் அருகே மாசாணியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள கோரோனோ மாரியம்மன் சிலையை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே அம்மாபட்டி கிராமத்தில் வசிப்பவர் முருகானந்தம் - வளர்மதி தம்பதியினர். இவர்கள் கடந்த 2013ம் ஆண்டு ஸ்ரீ மாயக்காரி மாசாணியம்மன் என்ற கோவிலை உருவாக்கி தினந்தோறும் அதற்காக சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்து வந்தனர்.

இந்த கோவிலுக்கு அமாவாசை பவுர்ணமி தேய்பிறை அஷ்டமி ஆகிய தினங்களிலும் மற்றும் வாரந்தோறும் செவ்வாய். வெள்ளி ஆகிய தினங்களில் கோவை, திருப்பூர் ,ஈரோடு மற்றும் மதுரை ,திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர்.

அதேபோல் மாதந்தோறும் அமாவாசை பௌர்ணமி தேய்பிறை அஷ்டமி ஆகிய தினங்களில் மதிய அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு அந்த கோயில் நிர்வாக தம்பதியினருக்கு மாசாணி அம்மனின் அருள் வாக்கில் கொரோனா மாரியம்மன் சிலை வைத்து வனங்கும்படி உத்தரவு வழங்கப்பட்டது. அதன்படி தனியாக கொரோனா மாரியம்மன் சிலை அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா மாரியம்மனை பல பகுதிகளிலிருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்து சென்றால் கொரோனா தொற்று உறுதியாக வராது என்று கோவில் பூசாரி தெரிவிக்கின்றார்.

அதனால் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

நாட்டையே உலுக்கி வரும் நிலையில், இந்த கொரோனா தொற்று பரவாமல் இருக்க இங்குள்ள கொரோனோ மாரியம்மனை தரிசனம் செய்தால் நோய் தொற்று பரவாது என்று கோவில் பூசாரி உறுதியளித்து கூறுவது பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் கோவிலில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில் மற்ற தினங்களில் இந்த கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகியும் பூசாரியும் ஆன முருகானந்தம் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்