ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சரிந்தது தக்காளி விலை: ஒரு கிலோ ரூ.40
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் தக்காளி.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், சாலைப்புதூர், அம்பிளிக்கை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி அதிகம் பயிரிடப்படுகிறது. தட்பவெப்பநிலை மாற்றத்தால் தக்காளி செடிகளில் இருந்து பூக்கள் உதிர்ந்ததால் விளைச்சல் மிகவும் பாதிப்படைந்தது. இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து 4-ல் ஒரு பங்காக குறைந்தது.
கடந்த 1 மாதத்துக்கும் மேலாக 1 கிலோ தக்காளி அதிக பட்சமாக கிலோ ரூ.120க்கு விற்பனையானது. சில ஊர்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் தக்காளி விலை அதிக பட்சமாக ரூ.200 வரையும் அதனையும் தாண்டி விற்பனை ஆனது.கடந்த வாரம் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.1500க்கு விற்பனையானது. இந்நிலையில் தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் 1 கிலோ தக்காளி ரூ.40க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் உள்ள பெரிய காய்கறி மார்க்கெட்டில் ஒன்றான ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டில் இன்று தக்காளி ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனையானது.இதனால் தக்காளி வாங்குவற்காக வந்த பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்திற்கு நிகராக தக்காளி விலை ஏறிக்கொண்டே செல்வதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்தார்கள். இந்த சூழலில் தான் தற்போது தக்காளி விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவது அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சி அடைய வைத்து உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu