ஒட்டன்சத்திரம் பகுதியில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி, கோம்பைபட்டி, சிந்தலவாடம்பட்டி, வேலூர், மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சூரியகாந்தி பயிரிட்டுள்ளனர்.
மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி தற்போது அறுவடைக்கு தயாராகும் நிலையில் கண்களைக் கவரும் வகையில் பூத்துக்குலுங்குகிறது.
எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலைக்கு சமமாக சாகுபடி செய்யப்படும் பயிர் சூரியகாந்தி. சூரியனை நோக்கியே இந்த மலர் இருப்பதால் இதற்கு சூரியகாந்தி என்று பெயர். மஞ்சள் நிறமாக இருக்கும். ஐந்து அடி உயரம் கூட வளரும் இது ஒரு வெப்ப மண்டல பயிர்.
சூரியகாந்தி செடியின் வயது 80 முதல் 90 நாட்கள். சில நேரங்களில் அறுவடை முடிய நூறு நாட்கள் கூட ஆகிடும்.
சூரியகாந்தி பயிருக்கு சத்துக்கள் அதிகமாக தேவைப்படுகிறது. மற்ற எண்ணெய் வித்து பயிர்களை காட்டிலும் நைட்ரஜன் சத்து சற்று கூடுதலாக தேவைப்படுகிறது. ஏனெனில் பூக்களின் அளவு பெரிதாக இருந்தால் தான் மகசூல் கூடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu