ஒட்டன்சத்திரம் வந்தடைந்த பழனிக்கு செல்லும் இரத்தின வேல், 161 காவடிகள்

ஒட்டன்சத்திரம் வந்தடைந்த பழனிக்கு செல்லும் இரத்தின வேல், 161 காவடிகள்
X

இரத்தின வேல் மற்றும் 161 காவடிகள்.

பழனி முருகன் கோவிலுக்கு கொண்டு வரும் காரைக்குடி நகரத்தார் காவடியின் இரத்தின வேல் மற்றும் 161 காவடிகள் ஒட்டன்சத்திரம் வந்தடைந்தது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பழனி தைப்பூச பாதயாத்திரையானது கடந்த 12ம் தேதி குன்றக்குடியில் இருந்து துவங்கியது. நகரத்தார்கள் பாரம்பரியமாக காவடி எடுத்துச் செல்வது வழக்கம்.

தற்போது கொரோனா தொற்றின் காரணமாக அரசு விதிகளுக்கு உட்பட்டு அதன் கட்டுப்பாடுகளுடன் மாட்டுவண்டியில் பாரம்பரியமாக கொண்டுவரும் இரத்தின வேல் மற்றும் 161 காவடிகள் குன்றக்குடியில் இருந்து பாதயாத்திரையாக வந்து இன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோவில் வந்தடைந்தனர்.

இவர்கள் குன்றக்குடியில் தொடங்கி பாதயாத்திரையாக பழனி சென்று முருகனை தரிசனம் செய்துவிட்டு மீண்டும் நடந்தே குன்றக்குடி செல்வதை பாரம்பரிய வழக்கம்.

தொடர்ந்து 400 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பாரம்பரிய வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று இரவு சத்திரப்பட்டியில் தங்கிவிட்டு நாளை பழனி செல்லும் காவடிகள் தைப்பூசம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து மகம் நட்சத்திரம் வரை 5 நாட்கள் மண்டபத்திலேயே சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் முருகனை தரிசனம் செய்கின்றனர்.

சாமி தரிசனம் செய்த பின்னரும் ஊருக்கு பாதயாத்திரையாக செல்லும் வழியிலும் சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். இவர்கள் குன்றக்குடியில் இருந்து பழனி வந்து மீண்டும் பாதயாத்திரையாகவே குன்றக்குடி செல்ல 18 நாட்கள் ஆகும் என்கின்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்