ஒட்டன்சத்திரம் நங்காஞ்சியாற்றில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டன்சத்திரம் நங்காஞ்சியாற்றில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
X

 நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

நங்காஞ்சி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ளவர்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் நங்காஞ்சியாற்றில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையின் உயரம் 90 அடி. தற்போது 86.5 அடி தண்ணீர் உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் வினாடிக்கு 200 கன அடி நீர் வருகிறது.

அதே அளவு நீர் நங்காஞ்சி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் இடையகோட்டை நங்காஞ்சி ஆறு நீர்தேக்கத்திற்கு செல்கிறது. நங்காஞ்சியார் நீர்த்தேக்கம் நிரம்பியது. நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவான 39.37 அடியை எட்டியது.

எனவே நங்காஞ்சி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ளவர்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, பொதுப் பணித்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!