முழு ஊரடங்கு தடையை மீறி செயல்பட்ட ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை

முழு ஊரடங்கு தடையை மீறி செயல்பட்ட ஒட்டன்சத்திரம்  காய்கறி சந்தை
X

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தை

தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தை இயங்கியது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் முழு ஊரடங்கான இன்று தடையை மீறி காந்தி காய்கறி சந்தை செயல்பட்டதால் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் கேள்விக்குரியானது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கை தமிழக அரசு உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், மருந்தகம், உணவகம், பெட்ரோல் பங்க், பால் உள்ளிட்டவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தையானது நகராட்சி அனுமதி பெறாமலும், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமலும் இன்று அதிகாலை முதல் அரசு உத்தரவை மீறி செயல்பட்டது. அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் முகக்கவசங்கள் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் வழக்கம்போல் செயல்படுவதால் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இதனை நகராட்சி நிர்வாகமோ, காவல் துறையோ கண்டு கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!