ஒட்டன்சத்திரத்தில் ரூ. 10 லட்சம்மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

ஒட்டன்சத்திரத்தில் ரூ. 10 லட்சம்மதிப்பிலான  குட்கா பொருட்கள் பறிமுதல்
X

திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்கள்

ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை க்கு தகவல் கிடைத்தது

திண்டுக்கல் மாவட்டம்,ஒட்டன்சத்திரத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1600 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் குட்கா புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஒட்டன்சத்திரம் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் பேரில் தனிப்படை போலீசார் தாராபுரம் சாலையில் உள்ள அஷ்ரப் அலி என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு குடோனில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவரது குடோனில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ10 இலட்சம் மதிப்பிலான 1600 கிலோ எடைகொண்ட குட்கா புகையிலைப் பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து அஸ்ரப் அலி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களை கண்காணிக்கவும் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!