குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகை மளிகை தொகுப்புடன் முழுநீள கரும்பு வழங்கப்படும்

குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகை மளிகை தொகுப்புடன் முழுநீள கரும்பு வழங்கப்படும்
X

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில்  ஆய்வு செய்த அமைச்சர் சக்கரபாணி

பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படவுளள அரிசி பருப்பு நெய் உள்ளிட்ட பொருள்களை தரமானதாக உள்ளதா என அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகை மளிகை தொகுப்புடன் ஒரு முழுநீள கரும்பு ஆகியன வழங்கிட தமிழக முதல்வர் ஆணையிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 747 முழுநேர நியாயவிலைக்கடைகள் மற்றும் 288 பகுதி நேரக்கடைகள் ஆக மொத்தம் 1,035 நியாயவிலைக்கடைகளில் உள்ளது. இதில் 6,64,970 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு- 2022 வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படவுளள அரிசி பருப்பு நெய் உள்ளிட்ட பொருள்களை தரமானதாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தினேஷ்குமார், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி உடனிருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture