அரசுவிழாவில் செய்தியாளர்களை கொட்டிய தேனீ : மருத்துவமனையில் அனுமதி

அரசுவிழாவில் செய்தியாளர்களை கொட்டிய தேனீ : மருத்துவமனையில் அனுமதி
X

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கும் அமைச்சர் சக்ரபாணி. 

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் இருந்து பாசனத்திற்காக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி தண்ணீர் திறந்து வைத்தார்.

ஒட்டன்சத்திர அரசு விழாவில் மலை தேனி பத்திரிகையாளர்களை கொட்டியது.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக முதலமைச்சரின் உத்தரவின்பேரில் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக 17 நாட்களுக்கு 1223 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டது. அதன்பேரில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி, வினாடிக்கு 102.00 மில்லியன் கன அடி தண்ணீரை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்விற்கு செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மணிகண்டன், மாரிமுத்து உள்பட ஐந்துக்கும் மேற்பட்ட செய்தியாளர்களை ராட்சத தேனீக்கள் கொட்டியது. இதில் அவர்கள் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அதிகாரிகள் செய்த ஏற்பாட்டில் திட்டமிடல் இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன் களப்பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil