நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது; எனவே, பொதுமக்களுக்கு பாதுகாப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சில தினங்களாக வெயிலின் உச்சம் கடுமையாக உள்ளது. கடந்த மூன்று நாட்களாக கத்திரி வெயில் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரம் தொடங்கி இருக்கிறது. அதே நேரம், ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகளவு மழை பொழிவு காரணமாக, சோத்துப்பாறை அணை நிரம்பி அதில் இருந்து வாரக நதியின் வழியாக நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வைகை ஆற்றில் திடீரென அதிக அளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தகவலறிந்து நிலக்கோட்டை வட்டாட்சியர் சுப்பையா தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் இருந்த பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்தனர்.

தற்போது 7 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றில் வருவதால் இன்னும் திடீரென மழை அதிகரித்தால் அதிகளவு தண்ணீர் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்தனர்.

பொதுமக்களும் பக்தர்களும், வைகை ஆற்றில் செல்லும் வெள்ளப்பெருக்கை பார்த்து ரசித்தனர். இருப்பினும் தற்போது கொரோனா காலம் என்பதால் கூட்டம் கூட கூடாது என காவல் துறையும்,வருவாய்த் துறையும், பொதுப்பணித் துறையும் இணைந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil