செம்பட்டி அருகே லாரி, மினி வேன் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

செம்பட்டி அருகே லாரி, மினி வேன் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
X
செம்பட்டி அருகே லாரி, மினி வேன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர், மேலும் இருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அண்ணமார்பட்டியை சேர்ந்தவர் பாண்டி மனைவி செல்லம்மாள், இவரது மகள் பிரியா, சடச்சிபட்டியை சேர்ந்தவர் பெரிய பாண்டி ஆகிய 4 பேரும் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

தங்கள் சொந்த ஊருக்கே சென்றுவிடலாம் என வீட்டு சாமான்களை மினி வேன் மூலம் எடுத்து சென்றனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள திம்மலகுண்டு பகுதியை சேர்ந்தவர் கோட்டைசாமி மினி வேனை ஓட்டி சென்றுள்ளார்.

வண்டி செம்பட்டி அருகே உள்ள வீரசிக்கம்பட்டி பகுதியில் வரும் பொழுது, செம்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற லாரி, நேருக்கு நேர் மோதியது. இதில் மினி வேன் ஓட்டுநர் கோட்டைசாமி, செல்லம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

பெரிய பாண்டி மற்றும் பிரியா ஆகிய இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்தில் இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai robotics and the future of jobs