பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கிய எஸ்பி.சீனிவாசன்

பாதயாத்திரை பக்தர்களுக்கு  ஒளிரும் குச்சிகள் வழங்கிய எஸ்பி.சீனிவாசன்
X

கொடைரோடு அருகே பாதயாத்திரை பக்தர்களுக்கு எஸ்பி.சீனிவாசன் ஒளிரும் குச்சிகள் வழங்கினார்

. இரவு நேரத்தில் ஓய்வு எடுத்து பகலில் பாதயாத்திரை செல்ல வேண்டும் என்றும், சாலையில் ஓரமாக நடந்து செல்ல வேண்டும்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பாதயாத்திரை பக்தர்களுக்கு எஸ்பி.சீனிவாசன் ஒளிரும் குச்சிகள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டி பிரிவில், போலீஸ் சோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சோதனைச்சாவடியை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, தென்மாவட்டங்களில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்களுக்கு அவர் ஒளிரும் குச்சிகளை வழங்கினார். இரவு நேரத்தில் ஓய்வு எடுத்து பகலில் பாதயாத்திரை செல்ல வேண்டும் என்றும், சாலையில் ஓரமாக நடந்து செல்ல வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார். இதைத்தவிர பாதயாத்திரை பக்தர்களுக்கு கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Tags

Next Story
ai in future agriculture