திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சந்தனக்கட்டைகள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ1லட்சம் மதிப்பிலான 31 - கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்த போலீஸார்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ1லட்சம் மதிப்பிலான 31 - கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்து ஒரு நபரை கைது செய்து வனத்துறையிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ள தும்மலப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் , வத்தலக்குண்டு வனப்பகுதியிலிருத்து கடத்தி வரப்பட்டு சந்தனக்கட்டைகளை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து, வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து போலீஸார் தும்மலப்பட்டி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தும்மலப்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ்(52) என்பவரது வீட்டில் சந்தனக் கட்டைகள் சாக்கில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பதுக்கி வைத்திருந்த 31 கிலோ எடை கொண்ட ரூ. 1லட்சம் மதிப்புள்ள சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்து, ஜெயராஜ் என்பவரையும் கைது செய்து வத்தலக்குண்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
பின்னர், வத்தலக்குண்டு காவல் (பொறுப்பு) ஆய்வாளர் சங்கரேஸ்வரன் சந்தனக்கட்டைகள் மற்றும் குற்றவாளி ஜெயராஜை வன துறை அதிகாரி ரெங்கநாதனிடம் ஒப்படைத்தார். வத்தலக்குண்டு பகுதியில் சந்தனக்கட்டை கடத்தலுக்கு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu