மதுரைக்கு கார்களில் கொண்டு சென்ற 700 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

மதுரைக்கு கார்களில் கொண்டு சென்ற  700 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்
X

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட்டில் அமலாக்கத்துறையினரின் சோதனையில் கைப்பற்றிய 700 கிலோ வெள்ளிப்பொருள்கள்

சேலத்தில் இருந்து மதுரைக்கு கணக்கில் வராத வெள்ளி பொருட்களை கடத்தி வருவதாக அமலாக்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு டோல்கேட்டில் அமலாக்த்துறையினரின் அதிரடி சோதனையில், சேலத்திலிருந்து மதுரைக்கு 6 கார்களில் கொண்டு வரப்பட்ட, ரூ 2கோடி மதிப்புள்ள 700 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலத்தில் இருந்து மதுரைக்கு கணக்கில் வராத வெள்ளி பொருட்களை கடத்தி வருவதாக அமலாக்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று ( 28.8.2021 ) திண்டுக்கல் மதுரை சாலையில் உள்ள கொடைரோடு டோல்கேட்டில், அமலாக்கத் துறையினர் வணிக வரித்துறையினர் மற்றும் அம்மையநாயக்கனூர் போலீஸார் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சேலத்தில் இருந்து 6 -கார்கள் வரிசையாக வந்தது அந்த காரை நிறுத்தி சோதனை செய்து பார்த்தபோது, காரின் பின்பகுதியில் வெள்ளி கொலுசு, வெள்ளி குத்து விளக்கு, குங்குமச்சிமிழ், வெள்ளி கட்டி, வெள்ளி டம்ளர் உட்பட சுமார் 700 கிலோ கணக்கில் வராத வெள்ளி பொருட்கள் இருப்பதை, அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 9- பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் இரண்டு கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!