திமுக பேரூராட்சி தலைவர் ராஜினாமா

திமுக பேரூராட்சி தலைவர் ராஜினாமா
X
முதல்வர் ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து, பட்டிவீரன்பட்டி திமுக பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி பெண் பொதுபிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. திமுக கூட்டணியில் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இப்பேரூராட்சியில் பெரும்பான்மையான வார்டுகளில் திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்று, திமுகவை சேர்ந்த கல்பனா தேவி கடந்த 4ம் தேதி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தேர்வான திமுகவினர், தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து , கல்பனா தேவி தனது ராஜினாமா கடிதத்தை பட்டிவீரன்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் உமாசுந்தரியிடம் வழங்கினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!