அதிக லாபம் தரும் மல்டி வெள்ளரிக்காய் : சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்
நிலக்கோட்டை பகுதியில், மல்டி வெள்ளரிக்காய் சாகுபடியை ஆய்வு செய்த அதிகாரிகள்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைத் தாலுகா பகுதியில், தோட்டக்கலைத்துறை சார்பாக நவீன விவாசய அபிவிருத்தி திட்டத்தின் மூலம், பசுமைகுடில் அமைத்து, மல்டி வெள்ளரிக்காய் எனப்படும் குறுகிய கால பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதை ஊக்கப்படுத்தும் விதமாக, மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மாவட்டத்தில் வேளாண்துறை மற்றும் தோட்டகக்கலைத்துறையால், பல்வேறு திட்டத்தின் மூலம் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக, பல்வேறு மானியக்கடன் உதவி செய்வது, பசுமைகுடில் செட் அமைப்பது, விதை தேர்வு செய்து கொடுப்பது பராமரிப்பு முறை பயிற்சி கொடுப்பது உள்ளிட்ட உதவிகளை செய்து தரப்படுகிறது.
இதன்மூலம் வெரும் 3-மாதத்தில் மகசூல் கிடைக்கக்கூடிய மல்டி வெள்ளரிக்காய் சாகுபடியை அதிகப்படுத்தியுள்ளனர் சாதாரணமாக 3- ஏக்கரில் சாகுபடி செய்து கிடைக்கும் வருமானம் வெரும் 25- சென்ட் நிலத்தில் கிடைக்கின்றது. சராசரியாக கிலோ-40க்கு விலை போகிறது ஒருமுறை அறுவடைக்கு 4-டன் வரை மகசூல் கிடைக்கின்றது. ஒருமுறை சாகுபடிக்கு 12-14முறை அருவடை செய்யலாம் எனவும் 20 - 22 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒருமுறைக்கு 4- இலட்சம் வரை வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
தற்போது, இந்த மல்டி வெள்ளரிக்காய் சாகுபடியை நிலக்கோட்டை, கொடைரோடு பகுதிகளில் அதிகளவிலான விவசாயிகள் அரசு உதவி பெற்று ஆர்வத்துடன் செய்து வருவதால் 10 -க்கு மேற்பட்ட பசுமைக்குடிலில் பயிர்செய்யபட்ட மல்டி வெள்ளரிக்காய்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu