திண்டுக்கல் தொழிலதிபர் கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

திண்டுக்கல் தொழிலதிபர் கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
X

திண்டுக்கல் தொழில் அதிபர் நிறுவனம்.

திண்டுக்கல் வாசனை திரவிய தயாரிப்பு தொழிலதிபர் கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

நிலக்கோட்டையில் பிரபல தொழிலதிபர் புஷ்பா ராஜ் ஜெகன் வாசனை திரவிய தயாரிப்பு கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை செண்டு உற்பத்தி தொழிற்சாலையில் சோதனை நடத்துவதற்காக மும்பையில் இருந்து சென்னை மற்றும் மதுரை மண்டல வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று வந்தனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு வரை நீடித்தது. மண்டல அதிகாரிகள் உதவியோடு பல்வேறு குழுக்களாக பிரிந்து 6 ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த தொழிற்சாலையில் சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் ஒரு காரில் அவை அனைத்தும் எடுத்து செல்லப்பட்டன. சோதனை இன்னும் நிறைவு பெறாத நிலையில் இன்று 2-வது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
ai solutions for small business