நிலக்கோட்டையில் அதிகரித்து வரும் வைரஸ் தொற்றால் பொதுமக்கள் அச்சம்

நிலக்கோட்டையில் அதிகரித்து வரும் வைரஸ் தொற்றால் பொதுமக்கள் அச்சம்
X
நிலக்கோட்டைப் பகுதியில் அதிகரித்து வரும் தொற்றால் பொதுமக்கள் அச்சம். தீயணைப்பு துறையினர் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியிருப்பதால், நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் தற்காலிக தினசரி காய்கறி சந்தை பூமார்க்கெட்டிற்கு வெளி மாவட்ட வியாபாரிகள் வந்து செல்கின்றனர். நிலக்கோட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய மளிகைப்பொருட்களை வாங்க அலை மோதுவதாலும் கடந்த ஒரு வாரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று மட்டும் 4- பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்தடுத்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து நகர்ப்பகுதியில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பேரூராட்சி நிர்வாகத்தினர் சார்பில் நகரின் முக்கிய வீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தீயணைப்பு துறையினர் மூலம் கிருமிநாசினி மருந்துகளை தெரு தெருவாக வீடு வீடாகத் சென்று தெளிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil