ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து: பள்ளி மாணவன் உயிரிழப்பு

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து: பள்ளி மாணவன் உயிரிழப்பு
X

நிலக்கோட்டை அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் கதறி அழுத காட்சி.

பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோவில் எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் விஷ்வா என்ற ஆறாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்தில் பலி.

பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோவில் எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் விஷ்வா என்ற ஆறாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு. 5 மாணவிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அரசு பள்ளியில படிக்கும் மாணவிகள் காலை பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் தங்களது ஊரான சீத்தாபுரத்திற்க்கு ஆட்டோவில் நிலக்கோட்டை வத்தலகுண்டு சாலையில் சென்றனர்.

அப் பொழுது தீயணைப்பு நிலையம் அருகே வத்தலக்குண்டில் இருந்து கொடையரோடு வை நோக்கி வந்த அரசுப் பேருந்தும் ஆட்டோவும் மோதியதில் ஆட்டோவில் இருந்த ஆறு குழந்தைகளும் தூக்கி வீசப்பட்டன. இதில் விஷ்வா என்ற ஆறாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோவில் வந்த ஆனந்தி கலையரசி பாண்டிஸ்வரி உட்பட மாணவிகள் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

சம்பவ இடத்தில் உயிரிழந்த பள்ளி மாணவனின் உறவினர்கள் மாணவனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கூடாது எனக்கூறி செம்பட்டி நிலக்கோட்டை சாலையில் உயிரிழந்த மாணவனின் சடலத்தை வைத்து சாலை மறியலில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!