வத்தலக்குண்டில் இரவு நேரத்தில் குப்பைகளுக்கு தீ: மக்கள் வேதனை
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்களின் அன்றாட காய்கறிகள் மற்றும் பல்வேறு வகையான குப்பைகள் ஆங்காங்கே சேருகிறது.
இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கொட்டுவதற்கு இடமில்லாத காரணத்தால் திருட்டுத்தனமாக தெருத்தெருவாக இரவு நேரங்களில் சென்று குப்பை அள்ளி அதை சம்பந்தம் இல்லாத இடங்களில் கொட்டி வருகிறார்கள்.
இவ்வாறு கொட்டி வரும் அந்த குப்பையை தீ வைத்து எரிக்கின்றனர். அந்த தீ புகை பரவி மக்களுக்கு சுவாச கோளாறு போன்ற கூடுதல் உடல் தொந்தரவை பெற்றுத் தருகிறது.
தற்போது கொரோனாவுக்கு அடுத்த நிலையில் ஒமைக்ரான் என்ற நோய் பரவும் நிலையில், இந்த சூழ்நிலை வத்தலக்குண்டு பகுதியில் மிகுந்த அளவில் மன உளைச்சலையும் மக்களுக்கு வேதனையையும் தருகிறது.
சுகாதாரக் கேட்டையும் உருவாக்கி வருகின்ற சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. இது சம்பந்தமாக பல்வேறு வகையில் உயர்மட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தாலும் அதை பற்றி காதில் கூட வாங்கவில்லை.
எனவே இரவு நேரத்தில் திருட்டு வேலை செய்வது போன்று ஊழியர்கள் குப்பை அள்ளும் சூழ்நிலையை மாற்றி நல்ல சுகாதாரமான வத்தலக்குண்டு பேரூராட்சி சுகாதார கேடு இல்லாத ஒரு பேரூராட்சியாக மாறுவதற்கு இந்த விடியல் அரசு விடிவு காலத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை இப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்தலக்குண்டு பேரூராட்சில் பெருகிவரும் மக்கள் தொகைகேற்ப குப்பை கொட்டுமிடமும் பெருகி வருகிறது. சேகரிக்ப்படும் குப்பைகளை பேரூராட்சி குப்பை கிடங்கில் (வளம் மீட்டு பூங்காவில்) கொட்டாமல் சாலையின் ஓரம், குடியிருப்பு பகுதி மற்றும் கோவில் அருகாமையில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களே கொட்டிச்செல்லும் நிலையை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu