தேங்காய் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கலக்கம்

தேங்காய் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கலக்கம்
X
பட்டிவீரன்பட்டி பகுதியில்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பட்டிவீரன்பட்டி பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, அய்யம்பாளையம் ,மருதாநதி அணை பகுதி, சித்தரேவு, சித்தையன்கோட்டை, எம் .வாடிப்பட்டி, சிங்காரகோட்டை, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகின்றது.

கொரோனா பரவல் காரணமாக குடோன்களில் தேங்காய்கள் தேக்கமடைந்து தொழில் நஷ்டம் அடைந்து வருகிறது. இதனிடையே ஊரடங்கு அறிவிப்பால் மேலும் நஷ்டம் அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தென்னை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட தேங்காய்கள் மட்டைகளில் இருந்து உரிக்கப்பட்டு வெள்ளகோவில், காங்கேயம் போன்ற ஊர்களுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விவசாயிகளிடமிருந்து முன்பு ரூ.18 வரை கொள்முதல் செய்யப்பட்ட தேங்காய்கள் தற்போது ரூ.10-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. கொப்பரை தேங்காய் கண்ணுக்கு ரூ.12,000 வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து விலை இறங்குமுகத்தில் உள்ளதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

இதுகுறித்து தேங்காய் மொத்த வியாபாரி ராமசாமி கூறும்போது விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் தேங்காய்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. கொரோனா தாக்கம் காரணமாக வெளிமாநிலங்களுக்கு தேங்காய்களை ஏற்றி செல்ல லாரிகள் வர தயக்கம் காட்டுகின்றனர். ஊரடங்கு அறிவிப்பால் மேலும் நஷ்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு முன்கூட்டியே தேங்காய்களை வெளியூர்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!