நிலக்கோட்டை அருகே கோட்டாட்சியர் வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து

நிலக்கோட்டை அருகே கோட்டாட்சியர் வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து
X

கோட்டாட்சியர் வந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது 

 

நிலக்கோட்டை அருகே கோட்டாட்சியர் வந்த வாகனம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து, பெண் கோட்டாட்சியர் உட்பட 3 பேர் காயம்.

மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் காசி செல்வி நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஆய்வுக்காக திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அவர் வந்த வாகனம் நிலக்கோட்டை செம்பட்டி சாலையில் மைக்கேல் பாளையம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் குறுக்கே வந்தவரின் மீது மோதாமல் இருக்க கோட்டாட்சியர் வாகன ஓட்டுநர் சக்திவேல் பிரேக் பிடித்துள்ளார் .

ஜீப் வந்த வேகத்தில் திடீரென பிரேக் பிடிக்கப்பட்டதால் நிலைதடுமாறி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் வருவாய் கோட்டாட்சியர் காசி செல்வி லேசான காயம் அடைந்தார். ஓட்டுனர் சக்திவேல் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஆகியோரும் காயம் அடைந்தனர்.

வாகனத்தின் ஈடுபாடுகள் சிக்கி இருந்தவர்களை பொதுமக்கள் மீட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .

இச்சம்பவம் தொடர்பாக நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!