நிலக்கோட்டையில் மணல் கொள்ளையர்களை பிடிக்கச்சென்ற அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்

நிலக்கோட்டையில் மணல் கொள்ளையர்களை பிடிக்கச்சென்ற அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்
X

 பறிமுதல் செய்யப்பட்ட ஜேசிபி, டிப்பர் லாரி.

நிலக்கோட்டையில் மணல் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற வருவாய் துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே மண் மற்றும் மணல் கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இதில் குறிப்பாக பிள்ளையார்நத்தம், சித்தர்கள் நத்தம்,அணைபட்டி, மட்டப்பாறை போன்ற வைகை ஆற்று படுகைகளில் அதிகளவு மணல் கொள்ளை நடைபெறுகிறது. மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் 24 மணி நேரமும் ஜேசிபி இயந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மணல் அள்ளி மதுரை,விருதுநகர் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.

வைகை ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை பிடுக்கச் சென்றால் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு மணல் கொள்ளையர்கள் கொலை மிரட்டல் விடுப்பதும் அடியாட்களை வைத்து தாக்குவது சகஜமாகிவிட்டது.

அதேபோல் இன்று பிள்ளையார் நத்தம் பகுதிக்கு வருவாய்த்துறை அதிகாரியான தங்கபாண்டியம்மாள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ராம்குமார் ஆகியோர் செந்தில் அண்ணா இம்மலையில் அப்பகுதியில் அரசு அனுமதியின்றி இரண்டு டிப்பர் லாரிகளில் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் முத்து மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அங்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் அரசு அனுமதி உள்ளதா எதற்காக மணல் அள்ளுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

பெண் அதிகாரி என்று கூட பாராமல் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவரும் அவர்களை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த வருவாய்த்துறை அதிகாரி உடனடியாக நிலக்கோட்டை வட்டாட்சியருக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரசு அதிகாரிகள் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் கேள்வி கேட்கும் போது மிரட்டியதால், தற்போது நிலக்கோட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்.

ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர், சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீதும், அரசு அதிகாரிகளையும் பொதுமக்களையும் மிரட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் நேற்று இரவு வருவாய் துறை ஆய்வாளர் தங்க பாண்டியம்மாள் மணல் கொள்ளையர்கள் மீது தன்னை ஆபாசமாகவும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக புகார் மனுவை அளித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!