வெளிப்படைத் தன்மையின்றி ரகசியமாக நடத்தப்படுவதாக ஏலதாரர்கள் குற்றச்சாட்டு

வெளிப்படைத் தன்மையின்றி ரகசியமாக நடத்தப்படுவதாக ஏலதாரர்கள் குற்றச்சாட்டு
X

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏலத்தை நடத்தப்பட்டுவருகிறது.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏலத்தை நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையருகே தொடர்ந்து 5-வது முறையாக நிறுத்தப்பட்ட ஏலம் பரப்பரப்பான சூழலில் இன்று ஒன்றிய அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. வெளிப்படைத் தன்மையின்றி இரகசியமாக நடத்தப்படுவதாக ஏலதாரர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பச்சமலையான் கோட்டை ஊராட்சியின் செம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள 16-கடைகள் பேருந்து நிலையத்துக்கான நுழைவு கட்டணம் வசூழிப்பது, இருசக்கர வாகன நிறுத்தம், மற்றும் தட்டு வியாபாரிகளிடம் கட்டணம் வாங்குவது உள்ளிட்ட நான்கு வகையான பொருள்கள் உள்ளடங்கிய ஏலம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏலம் முறையாக முன்னணி நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஏலம் நடத்துவதற்கான ஏற்பாடு செய்து கடந்த 5-முறை இரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 16 கடைகள் பேருந்து நுழைவுக்கட்டணம் பெறுவது இருசக்கர வாகன நிறுத்தம் மற்றும் தட்டு வியாபாரிகளிடம் கட்டணம் பெறுவது உள்ளிட்ட 25 வகையான அல்லது அவர்கள் மூலமாக ஊராட்சிக்கு ஒரு மாதத்திற்கு ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் வருவாய் வந்து கொண்டிருந்தது.இந்நிலையில் கடந்த 20 மாதங்களாக முறையாக யாரும் மாத வாடகை கட்டணம் ஊராட்சி நிர்வாகத்திற்கு கட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பச்சைமலையான்கோட்டை ஊராட்சி மன்றத்திற்கு 40-லட்ச ரூபாய் நிலுவைத் தொகையாக உள்ளதாக ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டது. மேலும் இந்த ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒரு நபர் மட்டும் 3-கடைகளுக்கு 20- மாதங்களாக ஐந்து லட்ச ரூபாய் பாக்கி கொடுக்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.2019 அதற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏலம் நடத்தப்படாததால் ஊராட்சிமன்ற நிர்வாகத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏலத்தை நடத்தப்பட்டுவருகிறது. ஏற்கெனவே சிண்டிக்கேட் அமைத்து திறந்த நிலை ஏலம் என இரகசிய அறையில் வைத்து ஏலம் நடத்தப்படுவதாகவும் ஏலதாரர்கள் புகார் கூறுகின்றனர்.

மேலும், பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டதையடுத்து , ஏலத்தில் காவல் துறை உதவியோடு குளறுபடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் ஏலம் திருப்தியளிப்பதாக இல்லை எனவும், நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் சில ஒப்பந்ததாரர்கள் தரப்பில் கூறப்பட்டது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா