10 ஆண்டுகளுக்கு பிறகு பட்டிவீரன்பட்டி பகுதியில் வாழை சாகுபடி

10 ஆண்டுகளுக்கு பிறகு பட்டிவீரன்பட்டி பகுதியில் வாழை சாகுபடி
X
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி பகுதியில், 10 ஆண்டுகளுக்கு பிறகு வாழை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம், ரெங்கராஜபுரம் காலனி, கதிர்நாயக்கன்பட்டி, சாலைபுதூர் நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஆண்டு சராசரியை விட கூடுதலாக மழை பெய்தது. இதனால் 10 ஆண்டுகளாக வரண்டு கிடந்த குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

விவசாய கிணறுகள் நிரம்பின, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. மேலும் தற்போது பட்டிவீரன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.

இதனையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு அப்பகுதிகளில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது வாழைக்கன்றுகள் நடவு செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இது குறித்து நெலலூரை சேர்ந்த வாழை விவசாயிகள் கூறும்கையில், வாழைக்கன்றுகள் நடவு செய்ய மே, ஜூன் மாதங்களில் சிறந்தது ஆகும். இதனால் தற்போது நடவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வாழைக்கன்று நடவு செய்த 10 முதல் 12 மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும் என்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!