நத்தம் மலையடிவார கிராமங்களில் நெற்பயிரை சேதப்படுத்தும் காட்டுமாடுகள்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மலையடிவார கிராமங்களில் நெற்பயிரை சேதப்படுத்தும் காட்டுமாடுகளை வனத்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளைச் சுற்றி கரந்தமலை, மொட்டை மலை, அழகர்மலை உள்ளிட்ட பல்வேறு மலைகள் உள்ளன.இதன் அடிவாரபகுதிகளில் அனைமலைப்பட்டி, கோட்டையூர், கோட்டைப்பட்டி, காத்தாம்பட்டி, சிறுகுடி, ஒத்தினிப்பட்டி, பஞ்சையம்பட்டி, காசம்பட்டி, முளையூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.
இப்பகுதிகளில் உள்ள நிலங்களில் விவசாயிகள் நெல்நடவு செய்து தற்சமயம் அறுவடைக்கு தயாராக உள்ளன. அப்பகுதிகளில் காட்டு மாடுகள் மலைகளை விட்டு இறங்கி வந்து நெற் பயிர்களை சேதப்படுத்துகின்றன.இதனால் விவசாயிகள் நெற்பயிர்களை பாதுகாக்க மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். சேலைகளை வயல்வெளிகளில் உள்ள நெற்கதிர்களை சுற்றிலும் வேலிபோல் கட்டி பாதுகாக்க வேண்டியுள்ளது.
அறுவடைக்கு தயாரான போதும் நெற்பயிர்களை அறுவடை செய்யும் வரை அவற்றை வயல் வெளிகளில் பாதுகாப்பது விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது. காட்டுமாடுகளின் சேதத்திலிருந்து பாதுகாப்பது கடினமாக இருக்கிறது. எனவே வனத்துறை காட்டு மாடுகள் மலையை விட்டு கீழ் இறங்கி வந்து சேதம் ஏற்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu