ஏழை மாணவியின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய காவல் ஆய்வாளர்

ஏழை மாணவியின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய காவல் ஆய்வாளர்
X

பள்ளி மாணவி திவ்ய பிரியதர்ஷினிக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் புத்தகத்தை காவல் ஆய்வாளர் ராஜமுரளி வழங்கினார்.

பள்ளி மாணவி திவ்ய பிரியதர்ஷினிக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் புத்தகத்தை காவல் ஆய்வாளர் ராஜமுரளி வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குளக்காரன்பட்டி கிராமத்தில் வசித்து வரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த திவ்ய பிரியதர்ஷினி தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவயது முதலே பள்ளியில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று முதலிடத்தையும் பிடித்து சான்றுகளை பெற்றுள்ளார். ஓட்ட பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் திண்டுக்கல் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நடைபெற்ற பல்வேறு அரசு தரப்பிலான விளையாட்டுப் போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவருக்கு தன்னார்வலர்கள் மற்றும் நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி விளையாட்டு உபகரணங்கள் மற்றும் புத்தகத்தை வழங்கினார். பல்வேறு பணிகளுக்கு இடையே மாணவிக்கு உதவிய காவல் ஆய்வாளருக்கு சமூக ஆர்வலர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!