கரும்பு கட்டுகள் ரெடி: அதிக விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை

கரும்பு கட்டுகள் ரெடி: அதிக விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை
X
பொங்கலை முன்னிட்டு தயாராகும் கரும்பு கட்டுகளுக்கு, இந்தாண்டு அதிக விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி சுற்று வட்டாரத்தில் கரும்பு விளைச்சல் அமோகமாக உள்ளது. சாணார்பட்டியை அடுத்து உள்ள தவசிமடை, மடூர், புகையிலைபட்டி,சிறுவத்தூர் பகுதிகளில் கரும்பு அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, போதிய மழை இல்லாததால் குறைந்த அளவே கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்திருப்பதால் கரும்பு விளைச்சலும் சிறப்பாக உள்ளது. பொங்கலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், தற்போது விவசாயிகள் கரும்புகளின் சோகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, வெளிமாவட்டங்களில் இருந்து போதிய வியாபாரிகள் வராததால், 10 கரும்பு கொண்ட கட்டு ஓன்று, 250 முதல் 350 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டு கரும்பின் தேவை இருக்கும் என்பதால், ஒரு கட்டு 700 முதல் 800 ரூபாய் வரை விற்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் இந்த ஆண்டு, தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக முழு கரும்பு வழங்குவதாக அறிவித்திருப்பதால், தங்களுக்கு நல்ல விலை கிடைக்குமென விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!