பேருந்து வசதி இல்லாததால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அவதி

பேருந்து வசதி இல்லாததால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள்   அவதி
X
போக்குவரத்து வசதி இல்லாததால் காலை 6:30 மணிக்கு உணவு சாப்பிடாமல் சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து சென்று பஸ்சை பிடிக்கின்றனர்

திண்டுக்கல் அருகே உள்ள கிராமங்களில் இருந்து பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பேருந்து வசதி இல்லாததால் அவதி.பெற்றோர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே ராஜாக்கபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளான பண்ணைப்பட்டி, பெம்மியகவுண்டன்பட்டி, பரதேசி கவுண்டன்பட்டி, ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் 2500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலும் தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளிகளின் குழந்தைகள் ஆவர்.

இதனால், இந்த தொழிலாளிகள் தங்கள் குழந்தைகளை இங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் திண்டுக்கல்லில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலும் பலர் கல்லூரிகளிலும் பயின்றார் வருகின்றனர். இந்த தொழிலாளிகளுக்கு ஒரு பக்கம் தங்கள் குழந்தைகளின் கல்வி பெற வாய்ப்புக் கிடைத்துள்ள மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம், பள்ளி, கல்லூரி, செல்லும் மாணவ மாணவிகளுக்கு முறையான போக்குவரத்து வசதி இல்லாததால், காலை 6:30 மணிக்கு வீட்டில் இருந்து உணவு சாப்பிடக்கூட முடியாமல் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திண்டுக்கல் - சிலுவத்தூர் மெயின் ரோட்டிற்கு நடந்து வந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பேருந்தில் ஏறிச் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர்.

மழை நேரங்களில் பள்ளிக்கு செல்வதும் வீட்டிற்கு திரும்புவதும் மிகவும் சிரமமாக உள்ளது. நேரமும் குறைவாக இருப்பதால் பெற்றோர்களுக்கு மிகுந்த வேதனையடைந்துள்ளனர். நாங்கள் சிரமப்படுவதைக் கருத்தில் கொண்டு அரசும் மாவட்ட நிர்வாகம் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil