கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை தலைச்சுமையாக தூக்கி சென்ற மாணவர்கள்

கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை தலைச்சுமையாக தூக்கி சென்ற மாணவர்கள்
X

பொங்கல் பரிசு தொகுப்பினை மாணவ மாணவிகள் சுமந்து சென்றனர்.

சாலை வசதி இல்லாததால் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை மாணவர்கள் தலைச்சுமையாக தூக்கி சென்றனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அரிசி, நெய், வெல்லம், உலர் திராட்சை, முந்திரிப்பருப்பு, ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் முழு கரும்பு முதலிய 21 பொருட்களை சென்னையில் வழங்கி தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவை சுற்றிலும் கரந்தமலை மற்றும் லிங்கவாடி மலையூர் உள்ளது.இன்று பொங்கல் பொருட்கள் சிறப்பு தொகுப்பு அடங்கிய அனைத்து ரேஷன் பொருள்களை இன்று எல்லப் பாறையிலிருந்து லிங்கவாடி மலையூருக்கு தலைச்சுமையாக பொதுமக்களும், பள்ளி மாணவ,மாணவிகளும் கரும்புகளையும் ரேசன் பொருட்களை கரடு, முரடான மலைப் பாதை வழியாக தலைச்சுமையாக கொண்டு சென்றனர்.

இந்த பொங்கல் தொகுப்பை வாங்குவதற்காக நான்கு கிலோமீட்டர் சுமந்து செல்லும் அவலம் இங்கே தான் உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!