நத்தம் என்.பி.ஆர்.கல்லூரியில் 35- வது மாநில ஜுனியர் தடகள போட்டிகள் தொடக்கம்

நத்தம் என்.பி.ஆர்.கல்லூரியில் 35- வது மாநில ஜுனியர் தடகள போட்டிகள் தொடக்கம்
X

 நத்தம் என்.பி.ஆர்.கல்லூரியில் 35- வது மாநில ஜுனியர் தடகள போட்டிகள் தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா தலைமை வகித்து தொடக்கி வைத்தார்

வரும் 12 -ம் தேதி வரை தடகள போட்டிகள் இங்கு நடைபெறவுள்ளன

திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் என்.பி.ஆர்.கல்லூரியில் 35- வது மாநில ஜுனியர் தடகள போட்டிகள் நேற்று தொடங்கியது.

தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான 35 வது ஜுனியர் தடகள போட்டிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முதலாக நத்தம் என்.பி.ஆர்.கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாலை 6 மணி அளவில் தொடங்கியது.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் துரை வரவேற்றார். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா தலைமை வகித்து பேசுகையில், இந்திய அளவில் நடைபெறும் பல்வேறு மாநில தடகள போட்டிகளை நேரில் பங்கேற்றுள்ளேன். எனினும் ஒரு மாநில அளவிலான போட்டியில் 4 ஆயிரம் வீரர்,வீரங்கனைகள் பங்கேற்கும் பிரமாண்டமான மாநாடு போன்ற போட்டியை தற்போது முதன்முதலில் இங்குதான் பார்க்கிறேன். இந்த ஏற்பாடுகளை செய்த திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க நிர்வாகிகளை பாராட்டுகிறேன் என்றார்.

முன்னதாக அவர் தடகள சங்க கொடி மற்றும் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து விளையாட்டு வீரர் ,வீராங்கனைகளின் கொடி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த சென்னை ,மதுரை,கோவை,கன்னியாகுமரி,தூத்துக்குடி, சேலம்,திருச்சி,நெல்லை,ஈரோடு உள்பட 38 மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக நேற்று காலை சங்கிலி குண்டு எறிதல்,போல்வால்ட் போட்டியுடன் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. தொடர்ந்து வரும் 12 -ம் தேதி வரை தடகள போட்டிகள் இங்கு நடைபெறவுள்ளன. இதில், எம்.எஸ்.பி.தாளாளர் முருகேசன், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்க தலைவர் சண்முகம்,மாநில தடகள சங்க இணைச்செயலாளர் உஸ்மான் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க செயலாளர் சிவக்குமார்,என்.பி.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் சுந்தரராஜன், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சரவணன்,பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆனந்த்,கல்வியியல் கல்லூரி முதல்வர் தாமரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்