கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் புத்தாண்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை.

கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் புத்தாண்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை.
X
இதில் நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி, உலுப்பகுடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் புத்தாண்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதி கோபால்பட்டி அருகே வி. மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் 2022 புத்தாண்டை தினத்தை முன்னிட்டு பெருமாளுக்குதாமரை, முல்லை, மல்லிகை, ஜாதிப்பூ, செவ்வந்தி, சம்பங்கி, ரோஸ், துளசி உள்ளிட்ட பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அர்ச்சனைகள் ஆராதனைகள் தீபாரதனை நடைபெற்றது. இதில் நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி, உலுப்பகுடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இச்சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் நரசிம்மன், ராஜசிம்மன் மற்றும் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!